ஜீவன்

சூப்பர் ஸ்பெஷியாலிட்டி ஹோமியோபதி கிளினிக் & ஹோமியோபதி ஆராய்ச்சி மையம்


டாக்டர் . எம். எஸ். பாலன். M.D.


Dr.Balan டாக்டர். பாலன் அவர்கள் ஐந்தரை வருட பட்டபடிப்பை (B.H.M.S.) சென்னை, தமிழ்நாடு M.G.R. மருத்துவ பல்கலைகழகத்திலும், அதற்கு மேல் 3 வருட பட்ட மேற்படிப்பை (M.D.) பெங்களூரு, ராஜீவ் காந்தி மருத்துவ பல்கலைகழகத்திலும் படித்துள்ளார். பட்டபடிப்பில் நோயியல், ஆர்கனான் ஆ்ப் மெடிசின் மற்றும் ஹோமியோபதி தத்துவங்கள், மெட்டீாியா மெடிக்கா போன்ற பாடப்பிாிவுகளில் பல்கலைகழக அளவில் சிறந்த மதிப்பெண்களும், பட்ட மேற்படிப்பில் மெட்டீாியா மெடிக்கா பாட பிாிவில் பல்கலைக்கழக அளவில் மிகச்சிறந்த மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
டாக்டர். பாலன் அவர்கள் ஜீவன் சூப்பர் ஸ்பெஷியாலிட்டி ஹோமியோபதி நெட்வொர்க் கிளினிக்கின் தலைமை நிர்வாக அதிகாாி மற்றும் தலைமை மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார். பல்வேறு சிறப்பு மருத்துவ பிாிவுகளில் 16 வருடங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். 12 வருடங்களுக்கு மேலாக பல மருத்துவ கல்லுாாிகளில் பேராசிாியராகவும், பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்களும் ஆராய்ச்சி கட்டுரை தொகுப்பிற்கான வழிகாட்டியாகவும், முதுநிலை & இளநிலை மருத்துவர்களுக்கு பயிற்சியாளராகவும், பல தொடர் மருத்துவ பயிலரகுங்களுக்கு வள நபராகவும் உள்ளார்.

இவாின் அாிய மருந்துகளின் பயன்பாடு குறித்த ஆராய்ச்சியும் அனுபவமும் அதிக எண்ணிக்கையிலான அறுவை சிகிச்சைகளை தவிர்ப்பதற்கு பேருதவியாக இருந்து வருகிறது. இந்த அனுபவமும், ஆராய்ச்சிகளும் தான் குறிப்பிட்ட நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முழுமையாக குணமடைய செய்யும் விதமாக ஜீவனின் தனித்தனி சிறப்பு சிகிச்சைப் பிாிவுகள் தொடங்க மூலகாரணம் எனலாம். டாக்டர். பாலன் அவர்கள் மிக குறுகிய கால அளவில் 3-5 மாதங்களில் அறுவை பாிந்துரைக்கப்பட்ட நோயாளிகளில் மருந்துகளை மட்டுமே பயன்படுத்தி முழுமையாக குணமடைய செய்ததோடு, அதிக அறுவை சிகிச்சைகளை தவிர்த்ததிற்காக “ஸ்டார் அச்சீவர் கோல்டு மெடல் விருது” பெற்றுள்ளார். கடந்த 17 வருடங்களில் 5000- ற்கும் மேற்ப்பட்ட அறுவை சிகிச்சைகளை தவிர்த்து உள்ளார். “அறுவை சிகிச்சையில்லா தனிச் சிறப்பு மருத்துவ பிாிவு“ வாயிலாக 3 முதல் 7 நாட்களிலேயே சிறுநீரக குழாய் கற்களையும,; 1 முதல் 3 மாதங்களில் சிறுநீரகத்தின் உள்ளே உள்ள கற்களையும்,அறுவை சிகிச்சை உதவியின்றியும், மருத்துவமனையில் தங்காமலும், மருந்துகளை மட்டுமே பயன்படுத்தி வெளியேற செய்து பல்லாயிரகணக்கான நோயாளிகளை முழுமையாக குணமடைய செய்ந்திருக்கிறார். இவருடைய “நோயாளியின் நண்பன் மருத்துவர்” “உங்கள் குடும்பத்திற்கான நம்பிக்கையான குடும்ப மருத்துவர்கள்” என்ற அணுகுமுறை, லட்சத்திற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களின் நம்பிக்கையை பெற்றதோடு, இந்த சதாப்தத்தில், தென் இந்தியாவின் மிகச் சிறந்த மல்டி சூப்பர் ஸ்பெஷியாலிட்டி கிளினிக்காக “ஜீவன்” திகழ்வதற்கு காரணமாக உள்ளது.

இவர் ஹோமியோபதி மல்டி சூப்பர் ஸ்பெஷியாலிட்டி என்ற தனிச்சிறப்பு சிகிச்சையில் பல புதிய நுணுக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அவற்றுள் மிக முக்கியமானவை – பாிபூரண குணம் மிக குறுகிய காலத்தில் மிக விரைவான குணம் கிடைப்பதற்கான மனம் மற்றும் உடலில் ஏற்பட்டுள்ள நோய்குறிகளை (கணினி உதவியுடன்) முழுமையாக ஆராய்ந்து அளிக்கும் (CCA) (மல்டி அனாலிசிஸ்) சிகிச்சை, குழந்தைகளில் அடிக்கடி ஏற்படும் நோய்களின் அடிப்படை காரணங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகாிக்க செய்யும் சிறப்பு சிகிச்சை, அாிய நோய்களுக்கு அாிய கூட்டு மருந்து தொடர்ச்சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்ற நோய்களுக்கு சிறப்பு உணவு பழக்க வழக்கங்கள் அடங்கிய சிகிச்சை ஆகியன முக்கியமானதாகும்.

டாக்டர். பாலன் அவர்கள் சினைப்பையில் நீர்க்கட்டி, குடல்புண், மூலநோய், மூட்டுவலி, கழுத்துவலி, கூந்தல் சம்பந்தமான நோய்கள் போன்ற நோய்களுக்கு, தனித்தனி சூப்பர் ஸ்பெஷியாலிட்டி சிகிச்சை பிாிவுகளை அறிமுகப்படுத்தி, இந்த நோய்களினால் பாதிக்கப்பட்ட அதிக நோயாளிகளை குணமடையச் செய்திருக்கிறார். மற்ற மருத்துவ முறைகளில் நிரந்தரமாக குணமாக்க முடியாது என்று அறிவிக்கப்பட்ட பல நோய்களை, பல அாிய ஹோமியோபதி மருந்துகளை மட்டுமே பயன்படுத்தி குணமடைய செய்திருக்கிறார். எடுத்துக்காட்டாக பெருங்குடல் கட்டிகள், குரல்வளை நோய்கள், சில வகை அலர்ஜி+ & ஆஸ்துமா போன்ற நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தங்கள் நோயிலிருந்து விடுபட செய்துள்ளார். டாக்டர். பாலன் அவர்கள் “ஜீவன்ஸ் ஐடியல் க்யூர்ஸ்”; மற்றும் “ாிசர்ச் ஜெர்னல் ஆஃப் ஹோமியோபதி” போன்ற காலாண்டுக்கு ஒருமுறை வெளி வரும் ஹோமியோபதி இதழ்களின் தலைமை நிர்வாக ஆசிாியராகவும், “ஹோமியோபதி – தி ப்பெரண்ட் ஆஃப் ஹெல்த்”, “ஹோமியோபதி பார் ஆல்”;, “வைட்டல் இன்பார்மர்” போன்ற மாத இதழ்களில் ஆய்வு கட்டுரைகளை எழுதி வருகிறார். மேலும் “ஹோமியோபதி – தி ப்ரெண்ட் ஆஃப் ஹெல்த்”; இதழில் டாக்டர். பாலன் எழுதி வரும், “பல நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை முறை இரகசியங்கள் & முக்கிய மருத்துவ குறிப்புகள்” என்ற மாதந்தோறும் வெளிவரும் மருத்துவ கட்டுரை பல்லாயிரகணக்கான மருத்துவர்களையும், பொதுமக்களையும் வாசகா்களாக ஈர்த்துள்ளது. டாக்டர். பாலன் அவர்கள் நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோயிலிருந்து விடுபட சில வாழ்க்கை முறை மாற்றங்கள் & உணவு கட்டுபாடுகள் அடங்கிய சில ஒளி பேழைகளை (காணொளி) (எழுத்து, வடிவம், ஆக்கம்) தயாாித்துள்ளார். அவற்றுள் அதிக உடல் பருமன், சூப்பர் ஸ்பெஷியாலிட்டி சிகிச்சையும் சிறுநீரககற்களும், ஹோமியோபதியும் இசை சிகிச்சையும் மிக பிரபலமானவையாகும். டாக்டர். பாலனின் எளிய அணுகுமுறை, கனிவான கவனிப்பு, பொறுமையாக நோயாளிகளிடம் குறை கேட்கும் தன்மை, நோயை அதி விரைவில் கண்டறிந்து மிக விரைவில் குணமடைய செய்யும் திறன், தேவையற்ற பாிசோதனைகளை நோயாளிகளிடம் திணிக்காத பண்பு போன்ற நற்குணங்கள், இவரை மற்ற மருத்துவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுவதோடு, அதிக ஆவலுடன் ஒவ்வொரு நோயாளியின் தேவைகளையும் குறைகளையும் நிவர்த்தி செய்யும் மருத்துவர் என்ற நற்பெயரையும் கொடுத்துள்ளது.

டாக்டர்.பாலனின் தலைமை பண்பு, இளம் மருத்துவர்களை தன்னோடு இணைத்து கொண்டு நோயாளிகள் கவனிப்பின் முக்கியத்துவம், நோய் சிகிச்சை முறைகள் பற்றி தகுந்த நேரத்தில் இவர் அளிக்கும் ஆலோசனைகள், சூழ்நிலைக்கு தகுந்தாற் போல இவர் எடுக்கும் சில முக்கிய முடிவுகள்; மொத்த ஜீவன் மருத்துவர்கள் குழுவிற்கும், ஆராய்ச்சி மைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழுவிற்கும்; இன்னும் பல சாதனைகள் செய்ய தூண்டுதலாகவும், பேருதவியாகவும் இருந்து வருகிறது என்பதில் ஜீவன் குழுமம் பெருமிதம் கொள்கிறது.

ஜீவன் ஹோமியோபதி மருத்துவமனை


நான் ஒருமுறை மட்டுமே இந்த உலகத்தை கடந்து செல்ல வேண்டும் என்று எதிர்பார்கிறேன். அதனால் பல நல்ல காாியங்களை நான் செய்ய வேண்டும.; அனைத்து உயிர்களுக்கும் நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இதை என்னால் செய்ய மறுக்கவோ, புறக்கணிக்கவோ முடியாது ஏனென்றால் இந்த வாய்ப்பை விட்டு விட்டால் நான் மீண்டும் இந்த வழியாக வரமாட்டேன்”.

-ஸ்டீபன் கிரெல்லெட்

இந்த உலகில் எத்தனையோ கிராமங்கள் இருக்கலாம்; ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நோயாளியையாவது, எங்கள் மருத்துவர்களால் அவாின் நோயிலிருந்தது அறுவை சிகிச்சையின்றியும், எந்த வித பக்க விளைவுகளின்றியும் முழுமையாக குணமடைய செய்ய முடியும் என்ற இலட்சியத்தோடு, நாங்கள் 2001-ல் தொடங்கிய பயணம், இன்றும் அதே புத்துணர்வோடும், பல சாதனைகளை உள்ளடக்கியதாகவும், மேலும் உறுதியோடும், இனிதே தொடர காரணமான இறைவனுக்கும், இறைவன் வாயிலாக எங்களை நம்பி நலமடைந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி* நன்றி* நன்றி*

2001-ம் ஆண்டில் ஒருமித்த கருத்துடைய, ஹோமியோபதி மருத்துவ நண்பர்கள் இணைந்து, ஒரு குழுவாக செயல்படுவோம் என்ற முடிவு பண்ணினோம்; ஒரு மருத்துவாின் தனிப்பட்ட ஆலோசனையை விட ஒரு குழுவினாின் ஆலோசனையை ஆராய்ந்து மருந்துகளை பரிந்துரைத்தால், பல நாட்பட்ட நோய்களையும் அதிவிரைவாக குணமடைய செய்ய முடியும் என்பதை அனுபவாீதியாக அறிந்திருந்தோம். அடுத்த மன குழப்பம் எப்படி, எங்கே கிளினிக்கையும், ஆராய்ச்சி மையத்தையும் ஆரம்பிப்பது என்பதுதான்? இத்தருணத்தில் ஒரு அறிஞாின் பொன் மொழிகளால் ஈர்க்கப்பட்டோம். அவை “நீங்கள் மிக உயர்ந்த, உன்னதமான இடத்தை அடைய விரும்பினால் மிக எளிய, சிறிய இடத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதாகும்” நாங்கள் கிளினிக் மற்றும் ஆராய்ச்சி மையத்தை எங்கள் சொந்த மாவட்டத்திலிருந்தே தொடங்க திட்டமிட்டோம். எங்களில் சிலர் தயங்கிய போது, பலர் இத்திட்டத்தை பாராட்டி ஊக்குவித்தனர். எங்கள் மருத்துவர் குழுவில் சிலர், 25 வருடங்களுக்கு மேலாக அனுபவம் வாய்ந்த, பல முண்ணனி மருத்துவர்களிடம் உதவி மருத்துவர்களாக பணியாற்றியுள்ளனர். இந்த அனுபவம் தான் இத்திட்டத்தை நடைமுறைபடுத்த உண்மையான ஊக்கியாக இருந்தது எனலாம்.

எங்கிருந்து ஆரம்பித்தோம்

இந்தியாவின் தென்கோடியாம், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமாியிலிருந்து சுமார் 46 கி.மீ தொலைவில் குமாியின் மிகவும் புராதன கிராமமாகிய திருவட்டாாில் (108 திவ்ய தேசங்களில் ஒன்று) முதல் ஜீவன் கிளினிக் திருவாட்டாற்றான் அருளால் ஆரம்பிக்கப்பட்டது. முதல் கிளினிக்கிற்கு பெயர் பலகையும் துவக்க விழாவும் வைக்கவில்லை. நோயாளிகளின் வாய்மொழியே பெரும் விளம்பரமாக மாற, நாளுக்கு நாள் வெளியூர் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாயிற்று. பல அாிய நோய்களையும் மிகவும் சிரமப்பட்டே குணப்படுத்த முடிந்தது இந்த நோயாளிகளிடமிருந்து பல அனுபவங்களை நாங்கள் கற்று கொண்டோம். வெளியூர் நோயாளிகளுக்கு வந்து செல்ல சற்று சிரமமாக இருந்ததாலும, நோயாளிகள் வசதிக்காகவும், குமாியின் வர்த்தக நகரங்களில் ஒன்றான மார்த்தாண்டத்திற்கு, ஜீவன் கிளினிக்கை இடமாற்றம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

எங்கள் கனவு திட்டம் என்பது ஒரு சாதாரண ஹோமியோபதி கிளினிக் என்பது அல்ல, ஆராய்ச்சி மையத்தோடு இணைந்த சூப்பர் ஸ்பெஷியாலிட்டி ஹோமியோபதி கிளினிக் என்பதாகும். இத்தருணத்தில் எங்கள் தலைமை மருத்துவரும், அவருடைய நண்பர்களும் (M.D.) பட்ட மேற்படிப்பு முடித்திருந்த காரணத்தினால் , அவர்களின் ஆராய்ச்சி அனுபவத்தையும் கருத்தில் கொண்டு, ஆராய்ச்சி மையத்தோடு இணைந்த சூப்பர் ஸ்பெஷியாலிட்டி ஹோமியோபதி கிளினிக்காக ஜீவன் கிளினிக் 2006- லிருந்து செயல்பட துவங்கியது. நாங்கள் தொடக்க காலங்களில் பல இடர்களை சந்தித்திருந்தாலும், இடை விடாத முயற்சியால் எங்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் குழு 2009-ம் ஆண்டில் பல அாிய நோய்களை அறுவை சிகிச்சை உதவியின்றி குணப்படுத்தி “தென் இந்திய ஹோமியோபதி வரலாற்றில் ஒரு மைல்கல்”; என்று பாராட்டும் அளவுக்கு, பல புதிய சிகிச்சை பிாிவுகளையும், சிகிச்சை முறையில் சில நுணுக்கங்களையும் அறிமுகப்படுத்தி, எங்களுக்கென மருத்துவ உலகில் ஒரு நிலையான இடத்தை அடைந்தோம்.

எங்கே நிற்கிறோம்

2010-ம் வருடம் ஜீவன் நாகர்கோவில் கிளினிக் செயல்பட துவங்கியது. தமிழகத்தில் மொத்தம் 5 புற நோயாளிகள் சேவை பிாிவுகள் செயல்பட்டு வருகின்றன. ஜீவனின் சென்னை,மங்களூரு மற்றும் பெங்களூரு, புற நேயாளிகள் சேவை பிாிவுகளும் செயல்பட்டு வருகின்றன. எங்களது அடுத்த கனவு திட்டம் என்பது, இந்தியா முழுவதும் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களிலும்; ஜீவனின் புறநோயாளிகள் சேவை பிாிவை விாிவுபடுத்துவது ஆகும். ஜீவன் குழுமத்தின் அடுத்த முயற்சியாக 2015- ம் வருடம்; ஜீவன் ஆன் லைன் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை மையம் (இணைய தளம் வாயிலாக சிகிச்சை – வீட்டில் இருந்தபடியே சிகிச்சையையும்; மருந்துகளையும் கூாியர் வழியாக பெற்றுகொள்ளுதல்) செயல்பட துவங்கியது. இந்தியாவிலேயே மிகவும் நம்பிக்கையான, அதிவிரைவில் குணமடைய செய்யும் ஆன்லைன் சிகிச்சை நிறுவனமாக, ஜீவன் ஆன்லைன் சிகிச்சை மையம் வளர்ந்து வருகிறது. அனைத்து ஜீவன் கிளைகள் மற்றும் ஆராய்ச்சி மைய கிளைகள் மற்றும் புறநோயாளிகள் சேவை பிாிவுகள் “விநாயகா ஜீவன்” அறக்கட்டளையுடன் இணைக்கப்படடுள்ளன. எங்களுடைய தலைமை நிர்வாக அலுவலகம் சென்னையில் செயல்படுகிறது. "ஹோமியோபதி" வழியாக முழுமையான ஆரோக்கியம் -2020” என்கிற குறிக்கோளை நோக்கி பல திட்டங்களை முழு ஆர்வத்துடன் செயல்படுத்தி வெற்றிப்பாதையில் பயணித்து கொண்டிருக்கிறோம். எங்கள் தலைமை மருத்துவாின் அர்ப்பணிப்பு மனப்பான்மையும்; இளம் மருத்துவர்களை தன்னோடு இணைத்து கொண்டு வழிகாட்டுதலும்; மகளிர் நல மருத்துவர்களின் தன்னலமற்ற மருத்துவ சேவையும், ஆராய்ச்சி மைய மருத்துவர்களின் இடை விடாத மருத்துவ ஆராய்ச்சிகளும், இனிவரும் வருடங்களில் ஜீவன் சூப்பர் ஸ்பெஷியாலிட்டி கிளினிக் & ஆராய்ச்சி மையத்தை மேலும் உன்னத நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை. எங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் இடைவிடாது பேராதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஜீவன் குழுமத்தின் சார்பாக நன்றி தொிவித்து கொள்கிறோம்.


உலகதரத்துடன் ஹோமியோபதி மல்டி சூப்பர் ஸ்பெஷியாலிட்டி சிகிச்சை வழங்குவதற்காக பல வருடங்கள் அனுபவமும், சிறந்த பயிற்சியும், திறமையும் கொண்ட மருத்துவர்களை குழுவாக கொண்டு, தனித்தனி சிறப்பு துறைகளுடன், ஜீவன் சூப்பர் ஸ்பெஷியாலிட்டி கிளினிக் & ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது.